காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளதால் அணைக்கு வரக்கூடிய நீர் வரத்து, முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் - எடப்பாடி சாலையில் காவிரி நீர் புகுந்துள்ளதால், அங்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது. காவிரி கரையோர பகுதியில் வயல்களும், தண்ணீரில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் கிணறுகள், பம்ப் செட்டுகள், மோட்டார்கள் உள்ளிட்டவையும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. எடப்பாடி அடுத்த பூலாம்பட்டியில் உள்ள கூட்டு குடிநீர் பம்ப் ஹவுஸ் தண்ணீரில் மூழ்கியது. இந்த பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவில் வாழை மற்றும் பருத்தி தோட்டத்திலும் தண்ணீர் புகுந்தது. ஒகேனக்கல், ஊட்டமலை, நாடார்கொட்டாய், ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணை முழுக்கொள்ளளவை நெருங்கி வருகிறது. இதனால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆற்றில் கரைபுரண்டு ஓடும் நீரில் குவியல் குவியலாக நுரை பொங்கி காணப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரி அருகேயுள்ள கே.ஆர்.பி. அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் தஞ்சை மாவட்டம் விளாங்குடியில் திருவையாறையும் - அரியலூர் மாவட்டத்தையும் இணைக்கும் கொள்ளிடம் கடல் போல் காட்சியளிக்கிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குள் 2 லட்சம் கனஅடி நீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கரையோர கிராமங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவானது திருச்சி வந்துள்ளது. மொத்தம் 44 வீரர்கள் கொண்ட அக்குழுவுடன் ஆட்சியர் பிரதீப் குமார் ஆலோசனை நடத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cauvery River, Heavy rain, Mettur Dam, Trichy