Home /News /tamil-nadu /

கோடையில் மேட்டூர் அணை திறப்பு... மு.க.ஸ்டாலின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும்! - விவசாயிகள் நெகிழ்ச்சி

கோடையில் மேட்டூர் அணை திறப்பு... மு.க.ஸ்டாலின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும்! - விவசாயிகள் நெகிழ்ச்சி

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

Mettur Dam Water Opening : காவிரி தண்ணீர் கடைமடை வரை செல்வதை தமிழக அரசு உறுதிச் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக, கோடைக்காலமான மே மாதம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்துள்ள தமிழக முதல்வரின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், சேலத்தில் தொடங்கி நாகப்பட்டினம் வரை, 12 டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன தேவைக்கும், 25 மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் அடிப்படை நீர் ஆதாரமாக விளங்குகிறது காவிரி. இதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையிலிருந்து, குறுவை சாகுபடிக்காக, ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி, மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.

மேட்டூர் அணை கட்டி முடித்த, 88 ஆண்டுகளில் இதுவரை ஜூன் 12ம் தேதியில், 17 முறையும், ஜூன் 12ம் தேதிக்கு முன்பாக, 10 முறையும், காலதாமதமாக, 61 முறையும் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 89வது ஆண்டாக, இன்று மேட்டூர் அணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைத்தார். குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு இன்று முதல், வரும் ஜனவரி 28ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணை பாசனம் மூலம், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில், 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதிகள் பெறவிருக்கின்றன. மே மாதத்திலேயே மேட்டூர் அணை திறக்கப்படுவதால், இருபோக சாகுபடி செய்யவும், கூடுதலாக, 6 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி செய்யவும் வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் நெகிழ்ச்சி

மேட்டூர் அணை திறப்பு குறித்து, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் தீட்சதர் பாலு, பாரதிய கிஸான் சங்க மாநிலச் செயலாளர் வீரசேகரன் ஆகியோர், ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ செய்திக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக, கோடைக்காலமான மே மாதம் மேட்டூர் அணையை திறக்கும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும்” என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தனர்.

விவசாயிகளின் எதிர்பார்ப்பு

மேலும், “கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு தூர் வாரும் பணிகள் தடைப்பட்டுள்ளன. ஆகவே, கடைமடை வரை தண்ணீர் செல்வதை உறுதிச் செய்ய வேண்டும். கர்நாடகாவில் பருவமழை அதிகம் பெய்வதால் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பயிர் அறுவடை வரை தண்ணீர் தொடர்ந்து கிடைக்க, தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்கூட்டியே பயிர் சாகுபடி செய்வதால், முன்கூட்டியே அறுவடை செய்யப்பட்டுவிடும். அப்போது நெல்லுக்கு உரிய விலை கிடைக்காத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. அதையும் தமிழக அரசு கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பதை உறுதிச் செய்ய வேண்டும்” என்றனர்.

Must Read : குரங்கம்மை தொற்றுநோய் அல்ல.. பதற்றப்பட வேண்டாம்: அமைச்சர் ம.சுப்பிரமணியன்

“எல்லாவற்றிற்கும் மேலாக, கர்நாடகா தற்போது மழை வெள்ள நீரை தான் திறந்து விட்டுள்ளது. இதை கணக்கில் வைத்துக் கொண்டு தண்ணீரை முழுமையாக திறந்து விட்டு விட்டோம் என்று அவர்கள் சொல்ல வாய்ப்பு இருக்கிறது. எனவே, மாதந்தோறும் கர்நாடகா வழங்க வேண்டிய தண்ணீரை தமிழக அரசு உறுதியாக கேட்டுப் பெற வேண்டும்” என்றனர்.
Published by:Suresh V
First published:

Tags: Delta Farmers, History, Mettur Dam, MK Stalin, Summer

அடுத்த செய்தி