டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தண்ணீரை திறந்து வைக்கிறார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், நேற்று மீண்டும் 9 இடங்களில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி இருந்தது.
கொடைக்கானலில் கோடை விழா, மலர் கண்காட்சியுடன் இன்று தொடங்குகிறது.
சென்னையில் இருசக்கர வாகனத்தில் பின்இருக்கையில் அமர்ந்துகொண்டு ஹெல்மெட் அணியாமல் பயணித்ததாக 2,023 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ள பேரறிவாளன், சிறைவாழ்வு குறித்த சுயசரிதை எழுதும் எண்ணம் இருப்பதாக கூறியுள்ளார்.
வாணியம்பாடி அருகே சாலை வசதி இல்லாததால், இறந்தவரின் சடலத்தை 11 கிலோமீட்டர் தொலைவுக்கு டோலி கட்டி தூக்கிச் சென்ற வீடியோ வெளியான நிலையில், விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
தொல்குடித் தமிழர்கள் இரும்புத் தாதுவை உருக்கி விவசாய கருவிகள் மற்றும் ஆயுதங்கள் செய்ததற்கான சான்றுகள் ஒசூர் அருகே கிடைக்கப்பெற்றுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாதிப் பெயர் சொல்லி அவமதிப்பதாகக் கூறி, பெண் ஊராட்சி மன்றத் தலைவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
கோவை மருதமலை முருகன் கோவிலில் பல அடுக்கு கார் பார்க்கிங் அமைய உள்ளதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
குவாட் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொள்கிறார். மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ஆல்பனிஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்துகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஜப்பானில் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
இலங்கையில் நிதித்துறைக்கு அமைச்சர் நியமிக்கப்படாமல் 3-வது முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 57 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.
டெல்லியில் 150 மின்சார பேருந்துகளின் சேவைகளை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைக்கிறார்.
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கான்ஸ் திரைப்பட விழாவில், SAFED திரைப்படத்தின் போஸ்டரை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்.
Must Read : நடிகர் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி
டெல்லியில் இரவு நேரத்திலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
ஏர்டெல் மீண்டும் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இரண்டாவது சுற்றுக்கு ரஃபேல் நடால், நோவக் ஜோக்கோவிக் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி, டிராவில் முடிந்தது.
தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கித் தொடரில் கர்நாடக அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Headlines, Today news