கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் கூடுதல் நீர் திறப்பு!

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் காவிரி கரையோரத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

news18
Updated: August 10, 2019, 7:57 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் கூடுதல் நீர் திறப்பு!
மேட்டூர் அணை
news18
Updated: August 10, 2019, 7:57 AM IST
கர்நாடகா அணைகளில் கூடுதல் நீர் திறப்பால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று மாலையில் ஒரு லட்சம் கன அடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக கர்நாடகாவில் உள்ள முக்கிய நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மைசூர் மாவட்டத்தில் உள்ள 84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணை முழு கொள்ளளவை அட்டியதால் அணைக்கு வரும் ஒரு லட்சத்து 25,000 கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.


இதேபோன்று மாண்டியாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து 25,000ம கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் கூடுதலாக நீர் வந்து கொண்டிருப்பதால் எந்த நேரத்திலும் அணை நிரம்பி கூடுதல் நீர் திறக்கப்படும். எனவே. கரையோர மக்கள் கால்நடைகளுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடகா அணைகளில் கூடுதல் நீர் திறப்பால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று மாலையில் ஒரு லட்சம் கன அடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் காவிரி கரையோரத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Loading...

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக கர்நாடகாவில் உள்ள முக்கிய நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மைசூர் மாவட்டத்தில் உள்ள 84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணை முழு கொள்ளளவை அட்டியதால் அணைக்கு வரும் 1,25,000 கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதேபோன்று மாண்டியாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து 25,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் கூடுதலாக நீர் வந்து கொண்டிருப்பதால் எந்த நேரத்திலும் அணை நிரம்பி கூடுதல் நீர் திறக்கப்படும்.

எனவே. கரையோர மக்கள் கால்நடைகளுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Also see...

First published: August 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...