கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள கல்லாறு வனப்பகுதிகளில் யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் தலையீடு காரணமாக அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும் வன விலங்கு ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான யானைகள் வாழ்கின்றன. குறிப்பாக அடிவார பகுதியான மேட்டுப்பாளையம் கல்லாறு வனப்பகுதி, பச்சைப் பசேல் என மரம் செடி கொடிகளுடன், பவானி ஆறும் ஓடுவதால் யானைகள் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறது. ஆனால் இந்தக் குளுமையான சூழலை அனுபவிப்பதற்காக அந்தப் பகுதிகளில் தனியார் தங்கும் விடுதிகள், பள்ளிகள் என பல்வேறு ஆக்கிரமிப்புகள் தற்போது பரவி வருவதால் யானைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என வன விலங்கு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
வனப்பகுதிகளில் கட்டிடங்கள் கட்டுவதற்காக ஏராளமான மரங்கள் வெட்டப்படுவதால் வனவளங்களும் பாதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. யானைகளை பட்டாசு வெடித்து விரட்டுவதில் ஆர்வம் காட்டும் வனத்துறையினர், விதிகளை மீறி வனப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள ஆக்கரமிப்புகளை அகற்ற முன்வர வேண்டும் என்பதே வனவிலங்கு ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
நாட்டில் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை காவல்துறை விரட்டியப்பதை போல் இந்த யானைகளை ஏன் விரட்டி அடிக்கிறார்கள்?... பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், மனிதர்கள் வாழும் நகரத்திற்கு யானைகள் வருவதில்லை. ஆனால் யானைகள் வாழும் வனப்பகுதிக்குள் மனிதன் குடியேறியதால் தான் இந்த விபரிதம். வனவிலங்குகளில் யானைக்கு ஒரு சிறப்பு குணம் உள்ளது. ஒரு முறை போன பாதையைத் தான் அவைகள் தொடர்ந்து பயன்படுத்தும். யானை வலசை என்று அழைக்கப்படும் அந்த பாதைகளை ஆக்கரமித்து கட்டிடங்கள் கட்டியதால் யானைகள் திசை மாறி ஊருக்குள் வருகின்றன.
Also see...
கொடைக்கானலில் மரத்தில் ஏறி பலாப்பழத்தை பறிக்கும் காட்டு யானை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Elephant routes, Encroachment, Forest deforestation, Mettupalayam