ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

கனமழை எச்சரிக்கை

கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்ததுள்ள நிலையில் தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வடகிழக்கு பருவமழை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடலோர, டெல்டா மாவட்டங்களிலும் தென்தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்த வருகிறது.

    இந்நிலையில், நேற்று வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வடக்கு இலங்கையை மையம் கொண்டுள்ள இந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி இன்று கடலூர் மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதன் காரணமாக இன்று முதல் 13ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில்ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர்,  ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர்,திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமாந மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு.. என்ஐஏ கைக்கு வந்த லிஸ்ட்.. கோவையை சல்லடை போடும் புலனாய்வு முகமை!

    கனமழை பாதிப்பை எதிர்கொள்ள தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக தயாராகிவருகிறது. அதன்படி, கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    Published by:Kannan V
    First published:

    Tags: Heavy Rainfall, Rainfall, Tamil Nadu, Weather News in Tamil