ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்துக்கு இன்று ரெட் அலெர்ட்.! - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்துக்கு இன்று ரெட் அலெர்ட்.! - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டிற்கு ரெட் அலெர்ட்

தமிழ்நாட்டிற்கு ரெட் அலெர்ட்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாட்டிற்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

    வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

    இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை அதீ கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இதையடுத்து நிர்வாக காரணங்களுக்காக தமிழ்நாட்டிற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்ததுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 15ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு இலங்கை பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 12ஆம் தேதி காலை தமிழகம் புதுச்சேரி கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

    இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் அதி கனமழையும் , 13 முதல் 15ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கனமழை பாதிப்பை எதிர்கொள்ள தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக தயாராகிவருகிறது. அதன்படி, கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    Published by:Kannan V
    First published:

    Tags: Chennai, Heavy Rainfall, Rain, Rain Forecast, Rain Update, Rainfall