தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில்களில் அலங்காரம்...!

தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில்களில் அலங்காரம்...!
மெட்ரோ ரயிலில் அலங்காரம்
  • News18
  • Last Updated: October 25, 2019, 6:24 PM IST
  • Share this:
தீபாவளியை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில்களில் செய்யப்பட்டுள்ள தீபாவளி சிறப்பு அலங்காரத்திற்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பயணிகளை கவர்வதற்கும் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை மற்றும் சென்ட்ரல் - செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆகிய வழித்தடங்களில் இயங்கும் 15 ரயில்களில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.


ரயில்களுக்குள் இருக்கைகளில் மாவிலை தோரணம் போன்றும், கண்ணாடி ஜன்னல்களில் விளக்குகள் போன்றும், தரைகளில் கோலங்கள் போன்றும் ஒட்டப்பட்டுள்ள வண்ணமயமான ஸ்டிக்கர்கள் வெகுவாக கவர்வதாக பயணிகள் தெரிவித்தனர்.

மேலும், இதே போன்று அனைத்து பண்டிகைகளுக்கும் அலங்காரம் செய்ய வேண்டும் என்றும், மெட்ரோ ரயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

First published: October 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading