8 ஊழியர்கள் பணிநீக்கம், 5 பேர் பணியிடை நீக்கம் - தமிழக அரசை தலையிடக் கோரும் மெட்ரோ ஊழியர்கள்
சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் 8 நிரந்தரப் பணியாளர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது. 5 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

மெட்ரோ ரயில் (கோப்புப்படம்)
- News18 Tamil
- Last Updated: June 27, 2020, 11:17 PM IST
சென்னை மெட்ரோ ரயில்வேயில் பணியாற்றி வந்த 250 நிரந்தர பணியாளர்கள் சார்பாக கடந்த 2018 அக்டோபர் மாதம் "மெட்ரோ ரயில்வே பணியாளர்கள் சங்கம்" தொடங்கப்பட்டது.
சங்கம் துவக்கிய காரணத்துக்காக 2018 டிசம்பர் 3 ஆம் தேதி 7 ஊழியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து 2019 ஏப்ரல் 29 அன்று இடைநீக்கம் செய்யப்பட்ட 7 ஊழியர்களில் 4 பேரை பணி நீக்கம் செய்தது நிர்வாகம். இந்த பணி நீக்கத்தை கண்டித்து ஏப்ரல் 29 மாலை மெட்ரோ ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பின்னர், நிர்வாகம் - பணியாளர்கள் இடையேயான விவகாரங்களை தீர்க்க மாநிலத் தொழிலாளர் நல ஆணையத்தில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அந்த பேச்சுவார்த்தைகளின் போது, ஊழியர்கள் மீது இனி எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க கூடாது என்ற ஆணையத்தின் உத்தரவை ஏற்றுக் கொண்டது மெட்ரோ ரயில்வே நிர்வாகம். இந்த நிலையில் தான் ஊரடங்கு அமலில் உள்ள கடந்த 2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் 173 பணியாளர்களுக்கு 4 முதல் 6 ஆண்டுகள் வரை ஊதிய உயர்வு ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 4 ஆம் தேதி மேலும் 4 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது நிர்வாகம்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பணியாளர் ஒருவர், "கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேலை நிறுத்தத்தின் போது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையின் நீட்சியாக இப்போது இந்த 4 ஊழியர்களுடன் சேர்த்து, மொத்தம் 8 நிரந்தர பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, ரயில் ஓட்டுனர், கட்டுப்பாட்டு அறை போன்ற முக்கிய பணிகளிலும் தனியார் ஒப்பந்த பணியாளர்களை பணியமர்த்தி பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களிடம் சம்பள பிடித்தம், ஆட்குறைப்பு உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் கூடாது என்று அரசு அறிவுறுத்தி வரும் நிலையில், மெட்ரோ ரயில்வே பணியாளர்களே பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.ஊரடங்கு காலம் என்பதால் தொழிலாளர் நல ஆணையத்திலோ, நீதிமன்றத்திலோ முறையிட முடியாத சூழல் உள்ளது. எனவே, இந்த விவாகரத்தில் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். அரசு தக்க நடவடிக்கை எடுத்து பணியாளர்கள் வாழ்வாதாரத்தை காக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.
சங்கம் துவக்கிய காரணத்துக்காக 2018 டிசம்பர் 3 ஆம் தேதி 7 ஊழியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து 2019 ஏப்ரல் 29 அன்று இடைநீக்கம் செய்யப்பட்ட 7 ஊழியர்களில் 4 பேரை பணி நீக்கம் செய்தது நிர்வாகம். இந்த பணி நீக்கத்தை கண்டித்து ஏப்ரல் 29 மாலை மெட்ரோ ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பின்னர், நிர்வாகம் - பணியாளர்கள் இடையேயான விவகாரங்களை தீர்க்க மாநிலத் தொழிலாளர் நல ஆணையத்தில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அந்த பேச்சுவார்த்தைகளின் போது, ஊழியர்கள் மீது இனி எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க கூடாது என்ற ஆணையத்தின் உத்தரவை ஏற்றுக் கொண்டது மெட்ரோ ரயில்வே நிர்வாகம்.