வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்! மெட்ரோ ஊழியர்கள் அறிவிப்பு

இது தொடர்பாக பணியாளர் சங்கம் தொடங்கிய 8 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மெட்ரோ ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் மெட்ரோ சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.

news18
Updated: May 1, 2019, 8:50 PM IST
வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்! மெட்ரோ ஊழியர்கள் அறிவிப்பு
மாதிரிப் படம்
news18
Updated: May 1, 2019, 8:50 PM IST
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக மெட்ரோ ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் பணி வரன்முறை செய்யவேண்டும், அவுட்சோர்சிங் முறையில் ஆட்களை நியமிக்கக்கூடாது, ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக பணியாளர் சங்கம் தொடங்கிய 8 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மெட்ரோ ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் மெட்ரோ சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. அவர்களுடைய போராட்டம் தொடர்ந்து 3 நாள்களாக நீடித்தது.


இந்தநிலையில், இன்று தொழிலாளர் நல ஆணையம், மெட்ரோ ரயில் நிர்வாகம், மெட்ரோ ஊழியர்கள் சங்கம் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

இதுகுறித்து தெரிவித்த சி.ஐ.டி.யு தொழிற்சங்கத் தலைவர் சவுந்தர்ராஜன், ‘பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் முறையீடுவார்கள். முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து வேலை நிறுத்தம் திரும்பப் பெறபடுகிறது’என்று தெரிவித்தார்.

Also see:

Loading...

First published: May 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...