சென்னை மெட்ரோவில் பணிபுரிய 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு இன்று பணி நியமனம் - மேலும் பலர் காத்திருப்பு

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் பணிபுரிய 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்படாமல் இருந்த 96 பேரில் 25 பேருக்கு பணி நியமன ஆணையை அந்நிறுவனம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கியுள்ளது.

சென்னை மெட்ரோவில் பணிபுரிய 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு இன்று பணி நியமனம் - மேலும் பலர் காத்திருப்பு
மெட்ரோ ரயில் (கோப்புப்படம்)
  • Share this:
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் பணிபுரிய 2013 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்படாமல் இருந்த 96 பேரில் பணி நியமன ஆணையை அந்நிறுவனம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கியுள்ளது.

2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ரயில் ஓட்டுனர், நிலைய கட்டுப்பாட்டாளர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்காக மெட்ரோ ரயில் தேர்வாணையம் மூலம் ஆணை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்று 346 நபர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில்  தேர்வு செய்யப்பட்டனர்.

Also read: கொட்டும் மழையில் நனைந்தபடி 7 மணி நேரம் சாலையில் போக்குவரத்துக்கு உதவிய பெண்


அதில் 250 ஊழியர்களை மட்டுமே நிர்வாகம் பணியில் சேர்த்தது. மீதமுள்ள 96 நபர்களுக்கு ஓரிரு மாதத்தில் அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் நிர்வாகத்தை அணுகியபொழுது, தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அழைப்பு வரும் என்று கூறி கால தாமதம் செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த 96 பேரில் 36 பேர் நீதிமன்றத்தை நாடியதில் பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அந்த அடிப்படையில் தற்போது முதல் கட்டமாக 25 பணியாளர்களுக்கு இன்று பணி ஆணை வழங்கப்பட்டு பணியில் சேர்ந்துள்ளனர்.
First published: August 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading