17 ஆண்டுகளுக்கு பிறகு பாதி கொள்ளளவை எட்டிய ஏரிகள்... தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து தப்பித்த சென்னை

சென்னையின் நீராதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர் மட்டம் மொத்த கொள்ளளவில் பாதியை எட்டியுள்ள நிலையில், நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளதால் இந்தாண்டு முழுவதும் பற்றாக்குறை இன்றி தண்ணீர் வழங்கப்படும் என்று மெட்ரோ குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

17 ஆண்டுகளுக்கு பிறகு பாதி கொள்ளளவை எட்டிய ஏரிகள்... தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து தப்பித்த சென்னை
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: July 28, 2020, 4:18 PM IST
  • Share this:
ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்பட்ட 8.2 டி.எம்.சி, கிருஷ்ணா நதி நீராலும், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீராலும் சென்னையின் நீராதாரமாக விளங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், வீராணம் ஏரிகளில் நீர் இருப்பு மொத்த கொள்ளளவில் பாதியை எட்டியுள்ளன.

வழக்கமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் ஜூலை மாதத்தில் இந்தளவு நீர் இருப்பை 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தாண்டு எட்டியுள்ளதாக மெட்ரோ குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் தற்போது 94 மில்லியன் கன அடி நீர் உள்ளது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 71 மில்லியன் கன அடி உள்ளது.


3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,544 மில்லியன் கன அடி நீர் உள்ளது. 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 1,869 மில்லியன் கன அடி நீர் உள்ளது. 1,445 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் தற்போது 1,400 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

28.07.2020 நிலவரம் (மில்லியன் கன அடியில்)ஏரி - மொத்த கொள்ளளவு - தற்போதைய அளவு:  

பூண்டி - 3,231 - 94சோழவரம் - 1,081 - 71
புழல் - 3,300 - 2,544
செம்பரம்பாக்கம் - 3,645 - 1,869
வீராணம் - 1,445 - 1,400

மொத்த கொள்ளளவு - 12,702 மி.க.அடி
மொத்த இருப்பு - 5,978 மி.க.அடி

கடந்த ஆண்டு ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்திற்கு, நிலத்தடி நீர் மட்டம் வறண்டது முக்கிய காரணம் என்பதால், அந்த நிலை இனி ஏற்படாத படிக்கு சென்னையில் பராமரிப்பின்றி இருந்த 311 கிணறு, குளங்களை தூர்வாருதல், அனைத்து கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உறுதிப் படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் நிலத்தடி நீராதாரம் கணிசமாக உயர்ந்துள்ளது.

சென்னையில் நிலத்தடி நீர் மட்டம். நிலத்தில் இருந்து(மீட்டரில்)

மண்டலம் - (2019) டிசம்பர் - (2020) ஜூன்

திருவெற்றியூர் - 3.90 - 5.56

மணலி - 3.45 - 5.40

மாதவரம் - 4.60 - 6.82

தண்டையார்பேட்டை - 5.48 - 7.36

ராயபுரம் - 6.27 - 7.52

திருவிக நகர் - 4.60 - 7.94

அம்பத்தூர் - 4.54 - 8.33

அண்ணாநகர் - 3.71 - 6.30

தேனாம்பேட்டை - 4.66 - 6.51

கோடம்பாக்கம் - 5.66 - 7.51

வளசரவாக்கம் - 5.00 - 7.14

ஆலந்தூர் - 4.05 - 7.00

அடையாறு - 3.98 - 6.05

பெருங்குடி - 3.15 - 6.31

சோழிங்கநல்லூர் - 2.68 - 4.55

இந்தாண்டுக்கான கிருஷ்ணா நதி நீர் பகிர்வை ஆந்திரா விரைவில் வழங்க உள்ளதாக மெட்ரோ குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையின் குடிநீர் தேவைக்காக ஒரு நாளைக்கு 850 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்க வேண்டிய நிலையில், தற்போதைய நீர் இருப்பை கொண்டு 700 மில்லியன் தண்ணீர் விநியோகிக்க பட்டு வருவதகாவும், இந்தாண்டு டிசம்பர் வரை தட்டுப்பாடு இன்று மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் மெட்ரோ குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
First published: July 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading