முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 'திட்டமிடாத நகரமயமாக்கல் போன்றவற்றால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது' - வானிலை இயக்குனர் பாலச்சந்திரன்

'திட்டமிடாத நகரமயமாக்கல் போன்றவற்றால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது' - வானிலை இயக்குனர் பாலச்சந்திரன்

வானிலை இயக்குனர் பாலச்சந்திரன்

வானிலை இயக்குனர் பாலச்சந்திரன்

தமிழகம் முழுவதும் வானிலையை கண்காணிக்க தானியங்கி  மையங்களுக்கு  75 மழை மானிகள் நிறுவப்பட்டு உள்ளதாக வானிலை இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திட்டமிடாத நகரமயமாக்கல், அதிகரிக்கும் வாகனங்கள் போன்றவற்றால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது என தென்மண்டல வானிலை இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி வருகிற 8ம் தேதி புயலாக உருமாறி வடமேற்கு திசையில் மத்திய வங்கக் கடல் பகுதியில் புயல் நகரக் கூடும். இதன் காரணமாக வெப்பநிலை 3 டிகிரி வரை வட மாவட்டங்களில் உயரக்கூடும். தற்போது தினந்தோறும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை கூடுதல் வெப்பம் நிலவும்.

புவி வெப்பமயமாதல் மற்றும் நகரமயமாதல் காரணமாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும். ஏப்ரல் மாதத்தில் வேலூரில் 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. எந்த வானிலை நிகழ்வும் நீர் நிலம் காற்று ஆகியவற்றின் சக்தி பரிமாற்றத்தின் மூலம் நிகழ்கிறது. சுற்றுச் சூழலை பொறுத்து வெப்பம் மாறும்போது காற்றழுத்தம் விசை உள்வாங்கி நிலம் நீர் காற்று சக்தி பரிமாற்றம் மாறுபாடு அடைகிறது என தெரிவித்துள்ளார்.

ALSO READ | கள்ளச்சாராயம் விற்பனை... ஆத்தூர் டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

இந்த வேறுபாட்டால் சில இடங்களில் அதிகம் மழை பெய்வதால் பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்கள் காரணமாக அதிகளவு கரியமில வாயுக்கள் வெளியேற்றம் மற்றும் திட்டமிடாத நகரமயமாக்கல் செயல்படுத்த படுவதாலும் அதிக வெப்பம் ஏற்பட காரணமாகி விடுகிறது. ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை இயல்பு மழை 33 மில்லி மீட்டர் மீட்டரிலிருந்து 69 மில்லிமீட்டர் மீட்டர் வரை 66 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.கோடை காலத்தில் காற்றில் தரைக்காற்று கடலோரப் பகுதிகளில் இருக்கும்.மேகம் உருவாவது கோடைமழை பெய்வதால் வெப்பம் அதிகரிப்பது போன்ற நிகழ்வுகள் இருக்கும். மேற்கு வடமேற்கு திசை காற்று வீசுவதால் வெப்பநிலை அதிகரித்து இருக்கும்.

வானிலை இயக்குனர் பாலச்சந்திரன்

தமிழகம் முழுவதும் வானிலையை கண்காணிக்க தானியங்கி  மையங்களுக்கு  75 மழை மானிகள் நிறுவப்பட்டு உள்ளது. எஞ்சிய இடங்களில் மத்திய அரசு மூலம் உபகரணங்கள் வழங்கப்பட்டு சோழவரம் ஆரணி காட்டூர் தச்சூர் உள்ளிட்ட பல இடங்களில் செயல்படாத நிலையில் உள்ள வானிலை மழையளவு உள்ளிட்ட கண்காணிப்பு மையங்கள் செயல்படும் வகையில்  தற்போது சென்னை வானிலை மையத்தின் மூலம் உபகரணங்கள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும் தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. 8ம் தேதி புயலாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்க கடல் நோக்கி புயல் நகரும் என தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் : பார்த்தசாரதி

First published:

Tags: Balachandran, Meteorological Center, Meteorological dept