தமிழகத்தில் இன்று ஒரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கோப்புப் படம்

மத்திய மற்றும் வட அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தின் இன்று ஒரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் மலை மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் நாளை முதல் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வெப்பச்சலனம் காரணமாகவும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாகவும் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி,
திருநெல்வேலி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இதில் தேனி,நெல்லை, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

மலை பகுதிகளில் கனமழைக்கு வய்ப்பு

தென் மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடையும் நிலையில் நாளை தமிழகத்தின் மலை மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலத்தில் 4 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

மேலும் திருவாரூர், தஞ்சை அதிராம்பட்டினம் பகுதியில் 3செ.மீ மழை பதிவாகி உள்ளது. அதே போல் தஞ்சை வல்லம், மதுக்கூர், திருத்துறைப்பூண்டி, அணைக்கட்டு உள்ளிட்ட இடங்களில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேற்கு காற்றின் வேகம் 35 முதல் 45 கிலோ மீட்டர் வரை அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் மத்திய மற்றும் வட அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடல்: கோப்புப் படம்


இதேபோல ஆந்திரப் கடலோரப் பகுதியில் காற்றின் வேகம் 50 முதல் 65 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது. அதனால்  ஆந்திர பகுதியின் மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... எங்கும் தண்ணீர்... அசாம், பீகாரை புரட்டிப்போட்ட கனமழை...!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: