தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை; இன்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கோப்புப்படம்

கேரள பகுதிகளில் பெய்து வரும் மழையால் பாம்பாறு, சின்னாறு, தேனாறு ஆகிய ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து அமராவதி அணையை நோக்கி ஆர்ப்பரித்து வரத் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்றிரவு இடி, மின்னலுடன் பெய்த மழையால் குளுமையான சூழல் நிலவுகிறது.

தமிழகத்தில் வெப்பசலனம் மற்றும் தென் மேற்கு பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. வட கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், சென்னையில் நேற்றிரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

சென்னையில் பெய்த மழை

சென்னையின் வள்ளுவர் கோட்டம், வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம் உள்ள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. வார விடுமுறையில் திடீரென்று மழை கொட்டியதால், மழையில் நனைந்து தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். சாரல் மழைக்கு மத்தியில் சிறுமி ஒருவர் சாலையில் நின்றபடி குடும்பத்துடன் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்.

மழையில் கேக் வெட்டி கொண்டாடிய பெண்கள்


இன்று தமிழகத்தில் மிதமான மழை பெய்யும்

சென்னையில் இன்றும் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலைசார்ந்த பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், தென்மேற்குப் பருவமழை வலுப்பெற்று வருவதால், நீலகிரி, கோவை, தேனி, நெல்லை மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலைசார்ந்த பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கேரளாவில் 7 மாவட்டங்களில் கனமழை நேற்றும் நீடித்தது. காசர்கோடு, இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 முக்கிய அணைகள் நிரம்பியதால் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கேரளாவில் ரெட் அலர்ட் மற்றும்  ஆரஞ்ச் அலர்ட்

கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக பெய்த கனமழைக்கு 5 பேர் உயிரிழந்த நிலையில், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் 12 வெள்ள நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 165 குடும்பங்களை சேர்ந்த 835 தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் ஆறுகளில் மழை நீர் பெருக்கெடுத்துள்ளது

கேரள பகுதிகளில் பெய்து வரும் மழையால் பாம்பாறு, சின்னாறு, தேனாறு ஆகிய ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து அமராவதி அணையை நோக்கி ஆர்ப்பரித்து வரத் துவங்கியுள்ளது.

இதனால் 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் இரண்டு அடிவரை உயர்ந்து 38 அடியாக உள்ளது. அணைக்கு 860 கன அடி தண்ணீர் வந்துக் கொண்டிருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மேலும் படிக்க... ஜவுளிக்கடைக்குள் புகுந்து உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: பதற வைக்கும் சிசிடிவி காட்சி

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: