தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொறுத்தவரை காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடனும், பிற்பகலில் தெளிவாகவும் காணப்படும்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்
  • Share this:
வெப்பசலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு
நீலகிரி, தேனி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் மதுரை, திருச்சி, கரூர், சேலம், , வேலூர், திருத்தணி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 40-டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும். ஆகையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காலை 11.30 மணி முதல் 3.30 மணி வரை வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.


சென்னையை பொறுத்தவரை காலை நேரத்தில்
வானம் மேகமூட்டத்துடனும், பிற்பகலில் தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் ஏரனியல் பகுதியில் 4 செ.மீ மழையும், திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.Also see...Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: April 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading