தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

குமரிக்கடல் பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசுவதல் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் கடலுக்கு செல்ல வேண்டாம்.

Web Desk | news18
Updated: August 14, 2019, 3:30 PM IST
தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: August 14, 2019, 3:30 PM IST
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை இருக்கும். இதனால் நீலகிரி,கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டத்தில் அடுத்த 2 நாளுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என்றார்.

மேலும் தெற்கு மற்றும் உள் தமிழக மாவட்டத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றார்.  அதிகபட்சமாக பெரம்பலூரில் 8செ.மீ, வால்பாறையில் 7 செ.மீ மழை பதிவகியுள்ளது.

குமரிக்கடல் பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசுவதல் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் ஒரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் அதிகபட்சமாக 32 டிகிரி, குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்ஸ் வெப்பநிலை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...