தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

மழை

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பசலனம் காரணமாக வட தமிழகத்தில் காஞ்சிபுரம் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சின்னகல்லாறு பகுதியில் 7 செ.மீ மழையும், நீலகிரி பகுதியில் உள்ள தேவாலாவில் 6 செ.மீ மழையும், கோவை மாவட்டம் வால்பாறையில் 4செ.மீ மழையும், தாமரைப்பாக்கம் , பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, மகாபலிபுரம், காஞ்சிபுரம், அரக்கோணம் மேலாத்தூர் பகுதிகளில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசும் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

Watch: நாட்டுக்கோழியை மட்டுமே குறிவைக்கும் திருட்டு கும்பல்!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: