தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
மழை
  • News18
  • Last Updated: May 16, 2019, 1:34 PM IST
  • Share this:
மேற்கு உள் தமிழக மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் இதே பகுதியில் ஓரிரு இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் நிலப்பரப்பில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது, அதே போல் தெற்கு உள் கர்நாடக பகுதியிலும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இந்த இரண்டு மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும், மேற்கு உள் தமிழக மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.


மேலும் அதே பகுதியில் ஓரிரு இடங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் 5 செ.மீ மழையும், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 4 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

மேலும் தேனி பெரியார், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டை, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 3 செ.மீ மழை பதிவானது.சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகப்படியாக 37 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

Also see... பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை

Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading