தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 5, 2019, 2:23 PM IST
  • Share this:
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக


கோவை மாவட்டம் வால்பாறையில் 8 செ.மீ மழையும், கோவை மாவட்டம் சின்சோனா மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டரத்தில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மேலும் கோவை மாவட்டம் சின்னகாலர் பகுதியில் 4 செ.மீ மழையும், நீலகிரி மாவட்டம் மேல் பவானி, அவலாஞ்சி, தேவாலை, கன்னியாகுமரி மாவட்டம் பகுதிகளில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

நாகர்கோவில், மயிலாடி, தேனி மாவட்டம் பெரியார் பகுதிகளில் 2 செ.மீ மழையும், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், தஞ்சாவூர் மாவட்டம் வல்லம், கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, தக்கலை, கீழ் கோதையாறு பகுதிகளில் 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளன.சென்னை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். நகரின் ஓரிரு இடங்களில் மாலையில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...டும் வறட்சியைச் சமாளிக்க செறிவூட்டும் கிணறுகள்! களத்தில் இறங்கிய கிராமத்து பெண்கள்





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: July 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading