தமிழகத்தில் மழை தொடருமா...? வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன...?

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை தொடருமா...? வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன...?
மழை
  • News18
  • Last Updated: July 17, 2019, 10:07 AM IST
  • Share this:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  அடுத்துவரும் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்தினரன் தெரிவித்துள்ளார்.

வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வடதமிழகம் முதல் தென் தமிழகம் வரை உள்மாவட்டங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும் வெப்பசலனம் காரணமாகவும் அடுத்துவரும் 3 நாட்களுக்கு மிதமான மழை பொய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்தினரன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்றிரவு விடியவிடிய கனமழை கொட்டித்தீர்த்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் பெய்துள்ள மழையின் அளவு கீழ்வருமாறு...

சென்னை அருகே உள்ள சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 59 மில்லிமீட்டர் மழை நேற்றிரவு மட்டும் கொட்டித்தீர்த்துள்ளது.இதற்கு அடுத்தபடியாக கிண்டி அண்ணா பல்கலைக்கழக பகுதியில் 51 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலக பகுதியில் 49 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது.

மாம்பலத்தில் 42 புள்ளி 40 மில்லி மீட்டரும், அயனாவரத்தில் 42 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக நுங்கம்பாக்கத்தில் 37 மில்லி மீட்டர் மழையும், பெரம்பலூரில் 36 மில்லி மீட்டர் மழையும் பொழிந்துள்ளது.

தாமரைபாக்கத்தில் 10 செமீ மழையும் போலூரில் 8 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

இதே போன்று தண்டையார்பேட்டை, அம்பத்தூர், புரசைவாக்கத்தில் உள்ள சென்னை ஆட்சியர் அலுவலகம், சென்னை விமான நிலையம், ஆலந்தூர் உள்ளிட்ட இடங்களிலும் குறிப்பிடத்தகுந்த அளவில் நேற்றிரவு கனமழை கொட்டித்தீர்த்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கிய ஜீன் 1-ம் தேதியில் இருந்து இன்று வரை 6 சதவீதம் மழை பதிவாகியுள்ளது. இயல்பாக 9 சதவீதம் மழை பதிவாகியிருக்க வேண்டும் இது இயல்பைவிட 31 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...சென்னைக்கு வந்துருச்சு தண்ணீர்... முதல்ல வட சென்னை, தென் சென்னை மக்களுக்குதான்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading