Home /News /tamil-nadu /

தமிழகத்தில் மீண்டும் உருவாகியது கஜா புயல்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மீண்டும் உருவாகியது கஜா புயல்: வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம்

Cyclone Gaja மீனவர்கள் நாளை நவம்பர் 18-ம் தேதி தெற்கு வங்ககடல் பகுதிக்கும் 19, 20 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்ககடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்திவுள்ளது.

  • News18
  • Last Updated :
தெற்கு வங்க கடலில் நாளை (18-ம் தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறுகையில்,

தமிழக பகுதிகளை கடந்த கஜா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலைகொண்டுள்ளது. அடுத்து வரும் 12 மணி நேரத்தில் வலுப்பெற்று தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

அந்தமான் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் நாளை மாலை மேற்கு வங்க கடல் பகுதி மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக  உருவாகி வரும் நவம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் மேற்கு திசையில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக வரும் 19, 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை 17 செ.மீ மற்றும் கொடைக்கானலில் 15 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் 18, 19 ஆகிய தேதிகளிளும், தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் 19, 20 ஆகிய தேதிகளிலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் வங்கக்கடல் பகுதியை பொருத்த வரையில் மீனவர்கள், மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதிகளில் 18-ம் தேதியும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னையில் அவ்வப்போது மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Also see...
வேதனையில் வேதாரண்யம்

Published by:Vaijayanthi S
First published:

Tags: Weather Forecast

அடுத்த செய்தி