தமிழகத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழை!

கடந்த சில நாட்களாக கடுமையாக வெயில் வாட்டி வந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது

தமிழகத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழை!
கோப்பு படம்
  • News18
  • Last Updated: May 27, 2019, 8:16 AM IST
  • Share this:
தென்மேற்கு பருவமழை அந்தமான் தீவுகளில் தொடங்கியுள்ளதால், ஒரிரு நாட்களில் கேரளாவில் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்துள்ளது.

கேரளாவில் ஒரிரு நாட்களில் பருவமழை தொடங்கும்

தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உள்ளிட்ட மாநிலங்களில் கணிசமான மழைப்பொழிவை தரும் தென் மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்நிலையில், அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், ஓரிரு நாட்களில் கேரளாவில் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

ராயலசீமா முதல் குமரிக்கடல் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தென் தமிழகம் மற்றும் மேற்கு உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கிருஷ்ணகிரி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி, குருபரப்பள்ளி, குந்தாரப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் சூறை காற்றுடன் மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, சுங்க சாவடியில் இரும்பு தூண் பெயர்ந்து கார்கள் மீது விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், 8 ஆடுகள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தன.

அறுவடைக்கு தயாராகி இருந்த 2,000 வாழை மரங்கள் விழுந்தன

ஓசூரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் 7 வீடுகளின் மேற்கூரைகள் அடித்து வீசப்பட்டன. மின் கம்பிகளும் அறுந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. மேலும், M.அக்ரகாரம் கிராமத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 30-க்கும் மேற்பட்ட பசுமைக்குடில்கள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. அத்துடன், அறுவடைக்கு தயாராகி இருந்த 2,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சூறைக்காற்று வீசியதால் மின் கம்பங்கள் விழுந்தன

தருமபுரி மாவட்டத்தில் பொம்மிடி, தாளநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை கருமேங்கள் சூழந்திருந்தன. அப்போது, மின்னல் தாக்கியதில் தென்னைமரம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. மேலும் சூறைக்காற்று வீசியதால் மின் கம்பங்கள் விழுந்து, கிராமங்கள் இருளில் மூழ்கின.

கொடைக்கானலில் மிதமான சாரல் மழை

கொடைக்கானலில் நேற்று காலை முதலே மேகமூட்டமாக இருந்து நிலையில், மாலை ஒரு மணி நேரம் நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் நனைந்தபடியே சுற்றுலா பயணிகள் இயற்கையின் அழகை ரசித்தனர்.

குளுகுளு சூழல் காரணமாக பயணிகள் உற்சாகம்

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மக்கள் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்வதால் அங்கு வெப்பம் சற்று தணிந்துள்ளது.

Also see... விசித்திரமான திருமணம்... பெண் ஒருவர் தனது சகோதரியையே திருமணம் செய்துக் கொண்டார்

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading