சென்னையில் இடி, மின்னலுடன் பெய்த கனமழை!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இடி, மின்னலுடன் பெய்த கனமழை!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: August 29, 2019, 10:03 AM IST
  • Share this:
நேற்று மாலையில் சென்னை, தருமபுரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து காணப்பட்ட நிலையில், நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. பாரிமுனை, தேனாம்பேட்டை, தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ததால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

சென்னையின் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர் சுற்றுவட்டாரங்களில் பரவலாக மழை பெய்ததால் குளிர்ந்த சூழல் நிலவியது. மழை காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதனால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவு முழுவதும் பல இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது கொண்டே இருந்தது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also see... அஜித் ரசிகர் எரித்து கொலை.. நண்பர்களே செய்த கொடூர சம்பவம்
First published: August 29, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading