தமிழகத்தில் பரவலாக பெய்த மழை!

தமிழகத்தில் பரவலாக பெய்த மழை!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: July 10, 2019, 7:31 AM IST
  • Share this:
தமிழகத்தில் சென்னை, வேலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதேவேளையில், கோவை, நாகை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.

தமிழகத்தில் கோடை காலம் முடிந்து ஒன்றரை மாதங்கள் ஆன பின்பும் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. கடந்த வாரத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்த போதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அதன் சுற்றுவட்டாரத்தில் நல்லூர், மங்களம் பேட்டை பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.  பின்னர், மாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்ததால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால், குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாகையில் 2 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை

நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் கடந்த 6 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து. அத்துடன், குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். திடீரென நேற்று இரண்டு மணி நேரம்  கனமழை பெய்தது.காஞ்சிபுரத்தில் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவம் நடைபெறும் நிலையில் பக்தர்கள் வெப்பத்தினால் கடும் அவதிக்கு உள்ளாகினர். நேற்று, ஓரிக்கை, செவிலிமேடு, காந்தி சாலை  வாலாஜாபாத் பகுதிகளில் மழை பெய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

சிவகங்கையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பரவலாக மழை

சிவகங்கை மாவட்டத்தில் மழையின்றி கடும் வறட்சி நிலவியது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேல் மழை பெய்ததால் நீர்நிலைகளில் கணிசமான அளவு தண்ணிர் தேங்கியது.

நாமக்கலில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால்  குளி்ர் காற்று வீசியது.

புதுக்கோட்டையில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது

புதுக்கோட்டை நகரப்பகுதி, கட்டியாவயல், அன்னவாசல், ஆலங்குடி, கொத்தமங்கலம் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குளங்கள் மற்றும் ஏரிகள் வேகமாக நிரம்பின. இதில், செம்மேடு உக்குளத்தில் கரை உடைந்து, அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் நீர் புகுந்தது. சின்ன வெங்காயம், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது

புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது.  இதன் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஒருசில இடங்ங்களில் லேசான மழை பெய்யும்

இதனிடையே, தமிழகத்தில் சென்னை, வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்தாகவும் வானிலை மையம்  குறிப்பிட்டுள்ளது.

சென்னை முழுவதும் பரவலாக மழை

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. கிண்டி, பல்லாவரம், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

Also see... நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகிய சோகம்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்