சென்னையில் மற்றும் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னையில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
மாலை 5 மணிக்கு மேல் கருமேகங்கள் சூழ, கே.கே.நகர், கோடம்பாக்கம், கோயம்பேடு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மாலை நேரம் என்பதால், பள்ளி மாணவர்கள் பலர் மழையில் நனைந்தபடி உற்சாகமாக வீடு திரும்பினர்.மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
திருவள்ளுரில் 2 மணி நேரத்துக்கு மேல் கொட்டித் தீர்த்த கனமழை
திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம், அம்பத்தூர், அயப்பாக்கம், ஆவடி, முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணிநேரம் கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த ஒருவாரமாக மிதமான மழை பெய்து வந்த நிலையில், நேற்றைய மழையில் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது-
ராசிபுரத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பெய்த மழை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது.
விருத்தாசலத்தில் இரவு நேரத்தில் லேசான மழை
விருத்தாசலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு லேசான மழை பெய்தது. இதனால், குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நிம்மதிப் பெருமூச்சி விட்டனர்.
தமிழகம் முழுவதும் வறட்சி காரணமாக பெரும்பான்மையான பகுதிகளில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகினர். இந்நிலையில், தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க... உன் துணிச்சலை வணங்குகிறேன்’ - சூர்யாவுக்கு வாழ்த்து கூறிய சத்யராஜ்
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.