• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம்

தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

  • Share this:
    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

    தேனி, திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மத்திய மேற்கு வங்ககடல் மற்றும் ஆந்திர கடலோர பகுதியில் சூறாவளி காற்று 50 கி.மீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மன்னார்வளைகுடா, தென்மேற்கு இலங்கை கடற்பகுதியில் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால் இப்பகுதிக்கு செல்லும் மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: