வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) மாறி அந்தமான் போர்ட் பிளேரில் இருந்து கிழக்கு வட கிழக்காக 40 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடகிழக்கு திசையில் மியான்மர் கரை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் புயல் தூர முன்னறிவிப்பு கொடி எண் 1 (DISTANT CAUTIONARY SIGNAL NO:1 ) ஏற்றிட வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒருவார காலமாக வெயில் சுட்டெரித்து வருகின்றது. தமிழகத்தின் சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மேலும் 6 டிகிரிவரையில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்திருந்தது.
Must Read : செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்கவிடும் திட்டத்தை தள்ளிவைத்த நாசா!
இந்நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் மதிய வேளையில் வெளியே வரவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.