தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாகவும் பாலச்சந்திரன் குறிப்பி்ட்டார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: October 16, 2019, 4:28 PM IST
  • Share this:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்று தென்னிந்திய பகுதிகளில் பரவியதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாகவும் அவர் குறிப்பி்ட்டார்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு தினங்களுக்கு இடைவெளிவிட்டு மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Also see...

First published: October 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading