Home /News /tamil-nadu /

அடுத்த 5 நாள்களுக்கு தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 5 நாள்களுக்கு தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

குமரிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

    வட கிழக்கு பருவமழை காரணமாக அடுத்த அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் (சென்டிமீட்டரில்):

    மீமிசல் (புதுக்கோட்டை), ஆலங்குடி (புதுக்கோட்டை), ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), பாபநாசம் (திருநெல்வேலி) தலா 1 செ.மீ.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு குமரிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், டிசம்பர் 22ம் தேதி மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published:

    Tags: Heavy rain, Indian Meteorological Center

    அடுத்த செய்தி