Home /News /tamil-nadu /

தமிழகம், புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகம், புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

சென்னை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமுட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
    தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக காஞ்சிபுரம் ,வேலூர், திருவள்ளூர் ,விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ,காரைக்கால், பெரம்பலூர் ,அரியலூர் தஞ்சாவூர் திருவாரூர், புதுக்கோட்டை ,நீலகிரி கோவை ,தேனி திண்டுக்கல்லில் அடுத்த இரண்டு நாட்கள் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது,

    வெப்பச்சலனம் காரணமாகவும் காரைக்கால் அருகே கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது,

    சென்னை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமுட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும்,
    குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது, கடந்த 24 மணிநேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லார் 2 செ.மீ.மழை பதிவாகியுள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Weather Update

    அடுத்த செய்தி