அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

மாதிரிப் படம்

அடுத்த மூன்று மணி நேரத்துக்கு திருவண்ணாமலை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, சேலம், தேனி, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

    22-ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    23-ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    தற்போது புதிதாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய தமிழக மாவட்டங்களில் வரும் 3 மணி நேரத்துக்கு இடியும் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. காரைக்கால் பகுதியிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: