Home /News /tamil-nadu /

இந்த 11 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

இந்த 11 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

மாதிரி படம்

மாதிரி படம்

TN Weather Update: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று சேலம், நாமக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று (ஏப்ரல் 28) சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை (29.04.2022) சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 30, மற்றும் 01 ஆகிய தேதிகளில் தென் தமிழகம் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மே 2ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    Must Read : கொடைக்கானலில் மலர் கண்காட்சிக்கு தயாராகும் பிரையன்ட் பூங்கா - பூத்துக்குலுங்கும் பூக்கள்... சுற்றுலா பயணிகள் குதூகலம்..

    சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை.
    Published by:Suresh V
    First published:

    Tags: Rain, Rain Forecast, Weather News in Tamil

    அடுத்த செய்தி