Home /News /tamil-nadu /

மார்ச் 4, 5 ஆகிய தேதிகளில் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வுமையம் தகவல்

மார்ச் 4, 5 ஆகிய தேதிகளில் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வுமையம் தகவல்

மழை

மழை

Meteorological centre : தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் தொடர்பான விவரங்களை சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    இன்றும் நாளையும் (மார்ச் 1, 2) தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மார்ச் 3ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    4ஆம் தேதி வெள்ளிக்கிழமை, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது .

    சனிக்கிழமை (மார்ச் 5) தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read :  குரூப் 4 தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்? TNPSC தலைவர் தகவல்

    மீனவர்களுக்கான எச்சரிக்கை, இன்று தென் வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Meteorological Center, Rain, Weather News in Tamil

    அடுத்த செய்தி