• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

மழை

மழை

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    நாளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதால், தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று, இன்று புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், தற்போது அது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து விலகி வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நாளை) தொடங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, இன்று புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    26ஆம் தேதி செவ்வாய்க் கிழமை சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    27ஆம் தேதி புதன் கிழமையும், வியாழக் கிழமையும் டெல்டா மாவட்டங்கள், கோவை, சேலம், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Must Read : 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருட்டு: பெண்களுடன் உல்லாசம்- சொகுசு வாழ்க்கை வாழ்ந்த திருடன் கைது

    இந்நிலையில், நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழையானது ‘ஏற்காட்டில் 10 செ.மீ., திருமூர்த்தி அணை 9 செ.மீ., பந்தலூர் 8 செ.மீ., பெரியார், சின்னக்கல்லாறு, கலசப்பாக்கம் தலா 7 செ.மீ., திருவண்ணாமலை, அமராவதி அணை தலா 6 செ.மீ., தாராபுரம், கீழ்பென்னாத்தூர், கொடைக்கானல், ஸ்ரீவில்லிபுத்தூர், ராமநாதபுரம், மலையூர், ஹாரிசன் எஸ்டேட் தலா 5 செ.மீ.’ என மாநிலத்தின் பல இடங்களில் மழை பெய்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: