முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வடகிழக்கு பருவமழை நாளை விலகலாம் - வானிலை ஆய்வு மையம் தகவல்

வடகிழக்கு பருவமழை நாளை விலகலாம் - வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம்

Northeast Monsoon : நாளை வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, ராயலசீமா, கர்நாடகா, கேரளா பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

வடகிழக்கு பருவமழை நாளை (ஜனவரி 22, 2022) தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று முதல் 25ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என தெரிவித்துள்ளது.

Must Read : அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறும் - அமைச்சர் பொன்முடி

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு ஏதுமில்லை என்றும், மீனவர்களுக்கான எச்சரிக்கையும் ஏதுமில்லை எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Meteorological Center, Northeast monsoon