Home /News /tamil-nadu /

சென்னையில் கொட்டும் கனமழை... வானிலை மையம் சொல்வது என்ன?

சென்னையில் கொட்டும் கனமழை... வானிலை மையம் சொல்வது என்ன?

மழை

மழை

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் கனமழை பெய்த நிலையில் தற்போது விட்டு, விட்டு மிதமான மழை பெய்து வருகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் இடியுடன் மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் கனமழை பெய்தது. இந்நிலையில் நகரின் மையப்பகுதியான சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, உள்ளிட்ட பகுதிகளில் விட்டு, விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னை புறநகர் பகுதிகளான ஆலந்தூர், விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. தற்போது தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பொய்து வருவதால் ஜிஎஸ்டி சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் முகப்பு விலங்குகள் எரியவிட்டபடி வாகனத்தில் ஓட்டி செல்கின்றனர். தெடர் கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி வருகிறது.வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்

    தொடர்ந்து தென்கிழக்கு பகுதியிலிருந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்று சென்னை நோக்கி நகருவதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சில மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்.   சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெருமபாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Also Read : தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் கனமழை

    திருவள்ளூர் மாவட்டத்தில் மணவாள நகர், காக்களூர், பூண்டி, புல்லரம்பாக்கம், திருப்பாச்சூர், கனகம்மாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாணவ, மாணவியர், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதேபோன்று மாவட்டத்தின் பிற பகுதிகளான திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி போன்ற இடங்களிலும் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நள்ளிரவு முதலே லேசான மழை பெய்து வருகிறது. மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுபாக்கம், செய்யூர், படாளம், கூடுவாஞ்சேரி, மாமல்லபுரம் என மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் லேசான மழை தொடர்கிறது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றன.
    Published by:Vijay R
    First published:

    Tags: Chennai, Weather, Weather Update

    அடுத்த செய்தி