Home /News /tamil-nadu /

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

மாதிரி படம்

மாதிரி படம்

Weather Forecast : வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    தென்கிழக்கு அரபிக்கடலில் கேரள கடலோரப்பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (மாச்ச 8) தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    நாளை (09.03.2022) முதல் வெள்ளிக்கிழமை (11.03.2022) வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 12ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்) : தூத்துக்குடி (தூத்துக்குடி ) 10, தூத்துக்குடி துறைமுகம் (தூத்துக்குடி ) 9, வாத்தலை அணைக்கட்டு (திருச்சி ), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர் ), துவாக்குடி (திருச்சி ) தலா 3, அகரம் சீகூர் (பெரம்பலூர் ), பூதலூர் (தஞ்சாவூர் ), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் ), திருச்செந்தூர் (தூத்துக்குடி ), வேப்பூர் (கடலூர் ), விராலிமலை (புதுக்கோட்டை ), மணப்பாறை (திருச்சி ) தலா 2, தொழுதூர் (கடலூர் ), வேப்பந்தட்டை (பெரம்பலூர் ), பாலவிடுதி (கரூர்), பெலாந்துறை (கடலூர் ), நெய்வேலி (கடலூர்),

    Must Read : கண்களைக் கட்டிக் கொண்டு மகளிர் தினத்தில் சாதனை : அசத்திய அரசுப் பள்ளி மாணவி!

    திருச்சிராப்பள்ளி விமான நிலையம் (திருச்சி), முசிறி (திருச்சி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), சமயபுரம் (திருச்சி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), செந்துறை (அரியலூர்), பொன்மலை (திருச்சி), எறையூர் (பெரம்பலூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), குளித்தலை (கரூர்), பெரிய அணைக்கட்டு (தஞ்சாவூர்), மயிலம்பட்டி (கரூர்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), தம்மம்பட்டி (சேலம்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), ஜெயம்கொண்டம் (அரியலூர் ), மங்களபுரம் (நாமக்கல் ) தலா 1. என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுவும் விடுக்கப்படவில்லை.
    Published by:Suresh V
    First published:

    Tags: Meteorological Center, Rain, Weather News in Tamil

    அடுத்த செய்தி