Home /News /tamil-nadu /

தமிழகத்தில் இன்று மிக கன மழை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் இன்று மிக கன மழை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மழை

மழை

Heavy Rains Today : தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
    தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    நாளை (13.04.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், 14ஆம் தேதி நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் , தென்தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    Read More : சசிகலாவிற்கு ஆதரவாக மீண்டும் போஸ்டர்கள்.. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் சொந்த ஊரில் ஒட்டப்பட்டதால் பரபரப்பு

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : தமிழ்நாட்டில் 3.5 லட்சம் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.. TNPSC குறித்து முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

    மீனவர்களுக்கான எச்சரிக்கை :

    இன்று (12.04.2022) தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Heavy rain, Rain Forecast, Weather News in Tamil

    அடுத்த செய்தி