Home /News /tamil-nadu /

தமிழகத்தில் இங்கெல்லாம் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வுமையம்

தமிழகத்தில் இங்கெல்லாம் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வுமையம்

மாதிரி படம்

மாதிரி படம்

Weather Forecast : டெல்டா மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், டெல்டா மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    இந்நிலையில், இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் கன மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும், 10 மற்றும் 12 வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் என்றும், கல்லூரியில் நடைபெறும் செமஸ்டர் தேர்வுகளும் நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி இரா.லலிதா தெரிவித்துள்ளார்.

    Must Read : தமிழர்களுக்கும் - தமிழ்நாட்டுக்கும் எதிராக எந்தச் செயல்கள் நடந்தாலும் முதலில் எதிர்ப்பது திமுக தான்.. முதல்வர் ஸ்டாலின்

    டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால், நெல் அறுவடை செய்து விற்பனைக்காக மூட்டைகளில் அடுக்கி வைத்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Rain, Rain Forecast, Weather News in Tamil

    அடுத்த செய்தி