தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று (18.01.2022) ஓரிரு இடங்களில் இலேசான
மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட
வானிலையே நிலவும் எனவும்
சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
நாளை (19.01.2022 முதல் 22 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 28 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்), எண்ணூர் AWS (திருவள்ளூர்) 5, திருப்பூண்டி (நாகப்பட்டினம்) 4, எம் ஜி ஆர் நகர் (சென்னை ) 3, எம் ஆர் சி நகர் (சென்னை), ஒய் எம் சி ஏ நந்தனம் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் , காரைக்கால், வாலாஜா (ராணிப்பேட்டை ) தலா 2,
Read More : தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவுக்கு இது தான் காரணமா?
செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), பொன்னேரி (திருவள்ளூர்), சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG(செங்கல்பட்டு), அரக்கோணம் (ராணிப்பேட்டை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), அம்பத்தூர் (திருவள்ளூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), டிஜிபி அலுவலகம் (சென்னை), திருவள்ளூர், கோத்தகிரி (நீலகிரி) , கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) , ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்) , திருக்குவளை (நாகப்பட்டினம்) தலா 1.
Must Read : தேசத்தின் சொத்துக்களான கனிம வளங்களை சட்டவிரோதமாக சுரண்டுவதை அனுமதிக்க கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்
இந்நிலையில், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் விடுக்கப்பட்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.