Home /News /tamil-nadu /

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Weather Update : தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை (ஜூலை 1) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை மறுநாள் (ஜூலை 2) சனிக்கிழமை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூலை 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

    காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை) 6, திருத்தணி (திருவள்ளூர் ) 5, வால்பாறை Pto (கோயம்புத்தூர்), அம்மூர் (ராணிப்பேட்டை) தலா 4, தேவாலா (நீலகிரி), திருவாலங்காடு (திருவள்ளூர்) , சோலையார் (கோயம்புத்தூர்) , திருவள்ளூர் (திருவள்ளூர்) , மகாபலிபுரம் (செங்கல்பட்டு) , சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) தலா 3,

    Must Read : லோன் ஆப் கும்பல் அட்டூழியம்.. பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டும் வடமாநில கும்பல்

    திருத்தணி பிடிஓ (திருவள்ளூர்) , அரக்கோணம் (ராணிப்பேட்டை) , பூண்டி (திருவள்ளூர்), ஆவடி (திருவள்ளூர்), வால்பாறை தாலுக்கா அலுவலகம் (கோயம்புத்தூர்), வாலாஜாஹ் (ராணிப்பேட்டை), தாம்பரம் (செங்கல்பட்டு) , மேல் பவானி (நீலகிரி) , மதுராந்தகம் (செங்கல்பட்டு) , அவலாஞ்சி (நீலகிரி) தலா 2 என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Heavy rain, Meteorological Center, Rain Update, Weather News in Tamil

    அடுத்த செய்தி