• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் மழை நீடிக்கும் என அறிவிப்பு : அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகத்தில் மழை நீடிக்கும் என அறிவிப்பு : அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

மழை

மழை

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில், இன்று கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் மழையும் என்றும், 5 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யக் கூடும் என்ற விவரத்தையும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து வெயிடப்பட்டுள்ள அறிவிப்பில், வெப்பச்சலனம் காரணமாக அக்டேபார் 18 (இன்று) கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

    19ஆம் தேதி செவ்வாய் கிழமை தென் மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, புதன் கிழமை (20 ஆம் தேதி) டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    21ஆம் தேதி வியாழக் கிழமை, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்

    வரும் வெள்ளிக் கிழமை (22ஆம் தேதி) சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): சோலையார் (கோயம்புத்தூர்) 11, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 10, பந்தலூர் (நீலகிரி) 9, வால்பாறை (கோயம்புத்தூர்), 7, தேவாலா (நீலகிரி மாவட்டம்) 6, பெரியாறு (தேனி) 5, வாலாஜா (ராணிப்பேட்டை) 4, பேராவூரணி (தஞ்சாவூர்), திண்டுக்கல் (திண்டுக்கல்), செங்கோட்டை (தென்காசி), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை) தலா 3, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), பெரம்பூர் (சென்னை), சூரலக்கோடு (கன்னியாகுமரி), தென்காசி (தென்காசி), ஆயக்குடி (தென்காசி), தொண்டி (ராமநாதபுரம்) தேக்கடி (தேனி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) புத்தான் அணை (கன்னியாகுமரி), காரையூர் (புதுக்கோட்டை) தலா 2.

    Must Read : கன்னியாகுமரியில் மழை, வெள்ளம் : தாழ்வான பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    அரபிக்கடல் பகுதியில், கேரள கடலோரப் பகுதி, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் முனைவர் நா. புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: