முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்யும் : வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்யும் : வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு

மழை

மழை

டிசம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :

தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (03.12.2021) தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மேலும், நாளை (04.12.2021) கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் .

ஞாயிற்றுக்கிழமை (05.12.2021) சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

டிசம்பர் 06 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் .

செவ்வாய் கிழமை (07.12.2021) தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 06, 07 ஆகிய தேதிகளில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகாலை நேரங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஆயிக்குடி (தென்காசி) 8, சேரன்மகாதேவி (திருநெல்வேலி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) தலா 7, கன்னியாகுமரி (கன்னியாகுமரி), சிவகிரி (தென்காசி) தலா 6, பெரியார் (தேனி) 5, சூரளக்கோடு (கன்னியாகுமரி), கொட்டாரம் (கன்னியாகுமரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), நாகர்கோவில் (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 4,

நாங்குநேரி (திருநெல்வேலி), கோவை (கோவை), மணிமுத்தாறு (திருநெல்வேலி), சங்கரன்கோவில் (தென்காசி) தலா 3, மயிலாடி (கன்னியாகுமரி), தென்காசி (தென்காசி), ராஜபாளையம் (விருதுநகர்) தலா 2, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), கோயம்புத்தூர் தெற்கு (கோவை), பெரியகுளம் (தேனி), பாபநாசம் (திருநெல்வேலி), தேக்கடி (தேனி), நடுவட்டம் (நீலகிரி), பர்லியார் (நீலகிரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி) தலா 1 .

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா-தெற்கு ஒரிசா கடலோர பகுதியை நாளை (04.12.2021) காலை நெருங்ககூடும். அதனை தொடர்ந்து வடக்கு - வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரை ஒட்டி நகரும்.

இதன் காரணமாக, 03 ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிசம்பர் 4ஆம் தேதி, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Must Read : ஒமைக்ரான் வைரஸ் கண்டறியும் பரிசோதனை முறைகள் என்னென்ன?

top videos

    டிசம்பர் 5ஆம் தேதி, மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Meteorological Center, Rain, Rain Forecast, Weather News in Tamil