ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

புயல் உருவாக வாய்ப்பு... நாளை முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் - வானிலை மையம்

புயல் உருவாக வாய்ப்பு... நாளை முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் - வானிலை மையம்

கோப்பு படம்

கோப்பு படம்

Tamil Nadu Weather | நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.

இது அடுத்த 24 மணிநேரற்றில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி டிசம்பர் 2ம் தேதி தமிழக கடற்கரையை அடைகிறது. காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியப்பின் அதற்கு அடுத்த 48 மணி நேரத்திற்குள் புயலாக உருமாற வாய்ப்பிருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

Also read... டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் 2000 மினி கிளினிக் - முதல்வர் அறிவிப்பு!

இதன் காரணமாக டிசம்பர் 1 மற்றும் 2ம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழை முதல் அதீத கன மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Cyclone, Rain updates, Tamil Nadu Weather