தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Web Desk | news18
Updated: November 8, 2018, 4:15 PM IST
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: November 8, 2018, 4:15 PM IST
வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று குமரிக்கடல் பகுதிகளில் நிலவி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது, தற்போது அதே பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கும்,  ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அதன் காரணமாக மீனவர்கள் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்ககடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் தலா 8 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தலா 7 செ.மீட்டர் மழையும், ராமேஸ்வரம் பகுதிகளில் தலா 6 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. அதே போல் பாம்பன் பகுதியில் தலா 4 செ.மீட்டர் மழையும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம், திருத்துறைப்பூண்டி மற்றும் காரைக்காலில் தலா 3 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னை பொருத்த வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also see...

First published: November 8, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்