நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் - வானிலை மையம்

நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலை பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: August 7, 2019, 5:56 PM IST
நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் - வானிலை மையம்
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: August 7, 2019, 5:56 PM IST
தமிழகத்தில் தெற்கு மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வடமேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தென் மேற்கு பருவக் காற்று தீவிரமடைந்துள்ளதாகக் கூறினார். இதன் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலை பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறினார்.

Also read... Chennai Power Cut: சென்னையில் நாளை (08-08-2019) மின்தடை எங்கெங்கே?


கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 41 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகக் கூறிய அவர், மேல் பவானியில் 22 சென்டி மீட்டரும், கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, வால்பாறையில் தலா 11 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியிருப்பதாக தெரிவித்தார்.

Also see...

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...