Home /News /tamil-nadu /

இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு...! வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்த 7 மாவட்டங்களில் மழை இருக்கு...! வானிலை ஆய்வு மையம் தகவல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சென்னை உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழையின் தாக்கம் குறைந்து அடுத்த 48மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை விடைப்பெறும் என எதிர்பார்ப்பு ...

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம், கடலூர், நாகை, விழுப்புரம் மற்றும் அரியலூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், மழையின் தாக்கம்  நாளை முதல் குறையும், தற்போதைய கணிப்புகளின் அடிப்படையில் வட கிழக்கு பருவமழை அடுத்த இரண்டு நாட்களில் நிறைவு பெற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கடலூரில் 3 செ.மீ. மழையும், சென்னை நுங்கம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 2 செ.மீ மழையும், சேலம் தம்மம்பட்டி - 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அதிகபட்சமாக வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Weather Update

அடுத்த செய்தி