தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

குறிப்பாக, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: October 19, 2019, 3:43 PM IST
  • Share this:
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 13 சென்டிமீட்டர் மழையும், வேடசந்தூரில் 7 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளதாக கூறினார்.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என அவர் தெரிவித்தார்.


குறிப்பாக, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், பெரம்பலூர், அரியலூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று பாலசந்திரன் எச்சரித்தார்.

Loading...

Also see...

First published: October 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...