முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் மழை - வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் மழை - வானிலை ஆய்வு மையம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் நேற்றிரவு மற்றும் இன்று காலை மிதமான மழை பெய்தது.

உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சியால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தது. இதனிடையே, சென்னையில் நேற்றிரவு சுமார் 9 மணியளவில் லேசான மழை பெய்தது.

சைதாப்பேட்டை, கிண்டி, வடபழனி, வளசரவாக்கம், கோயம்பேடு, முகப்பேர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இன்று காலையும் பல இடங்களில் பரவலான மழை பெய்தது.

Also see...

First published:

Tags: Weather Update